உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

கடமலைக்குண்டு : கண்டமனூர் அருகே வேலாயுதபுரம், எட்டப்பராஜபுரம் கிராம பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட சன்னாசியப்பன் வலசலிங்கம் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.யாக சாலை பூஜைகள், கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தேக்கம்பட்டி, கண்டமனூர், வேலாயுதபுரம், எட்டப்பராஜபுரம், கோவிந்தநகரம், தேனி, ஆண்டிபட்டி, சித்தார்பட்டி உட்பட பல கிராம பொதுமக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கு பின் சன்னாசியப்பன் வலசலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள், பஜனைகள், வலம்புரி சங்கு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி