உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தேனி : தேனி அல்லிநகரம் மலைக்கோயில் வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.இக்கோயில் சித்திரைத் திருவிழா ஆண்டு தோறும் மலைக்கோயிலில் கொடி ஏற்றுவது வழக்கம். நேற்று வீரப்ப அய்யனார் அலங்காரத்தில் நகர்வலமாக அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயில், வீதிஉலாவுடன் மலைக்கோயிலுக்கு சென்றடைந்தது. திரளான பக்தர்கள் நேர்த்திகடனாக பால்குடங்களுடன் மலைக்கோயிலை அடைந்தனர். மூலவருக்கு பாலாபிஷேகம் செய்து, பூஜைகள் நடந்தன. கோயிலுக்கு முன் உள்ள மூங்கில் மரத்தில் சித்திரை திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின் இரவு 8:00 மணியளவில் வீரப்ப அய்யனார் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் நகர்வலம் வந்து, இரவு பூக்குழி மிதித்தல் விழா நடந்தது. ஏப்., 10,12ல் காவடிகளுக்கு கலசம் கட்டுதல், ஏப்., 13 மாலை வீரப்ப அய்யனார் மின் அலங்காரத்தில் தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயிலுக்கு காவடியுடன் செல்வார். ஏப்., 14 ல் காலையில் காவடியுடன் சுவாமி புறப்பாடாகி, மலையடிவாரம் வீரப்ப அய்யனார் கோயில் சென்றடையும். அன்றிரவு 8:00 மணிக்கு புஷ்ப அலங்காரத்திலும், மின் அலங்காரத்திலும் சுவாமி நகர்வலம் நடக்க உள்ளது. ஏப்., 16ல் மறுபூஜை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை அல்லிநகரம் கிராமகமிட்டி தலைவர் கோவிந்தசாமி, துணைத் தலைவர் சிவராமன், செயலாளர் தாமோதரன், உதவி செயலாளர் வீரமணி, பொருளாளர் முருகன், விழா பொறுப்பாளர்கள் ராமர், புகழேந்தி, தியாகராஜன், பிரதாப், பொன்முத்துராமலிங்கம், தக்கார் ஹரிஸ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ