உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

தேனி: தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், தேர்தல் பிரிவு, மகளிர்திட்டம் சார்பில், என் வாக்கு என் உரிமை', 100 சதவீத ஓட்டுப்பதிவு நமது இலக்கு என்ற கருப்பொருளில் இந்திய தேர்தல் ஆணையத்தில் லோகோ படத்தை கோலமிட்டு அதனை சுற்றிமகளிர் திட்ட சுய உதவிக்குழு பெண்கள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்து, மகளிர் திட்ட இயக்குனர்ரூபன்சங்கர்ராஜா, உதவி திட்ட அலுவலர் பேபி, கண்காணிப்பாளர் பிரேமா,சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் பங்கேற்று,விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி