| ADDED : நவ 25, 2025 01:34 AM
போடி: போடியில் பெண்ணை கடத்தி வழக்கில் ஏழு பேரை போடி தாலுகா போலீசார் கைது செய்தனர். போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் இந்து ராணி 55. இவரது மகன் கார்த்திக் ராஜா 25 இவர் போடி டி.வி.கே.கே., நகரை சேர்ந்த தீபா 36. வின் மகள் பூஜா ஸ்ரீ 21. யை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் பூஜா ஸ்ரீ யின் குடும்பத்தினருக்கு பிடிக்க வில்லை. இதனால் பூஜா ஸ்ரீ யை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு இந்துராணியை, பூஜா ஸ்ரீ யின் தாயார் தீபா மிரட்டி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபா 36, உறவினர்கள் மணிமாலா 50, ரஞ்சித் குமார் 29, வைரமணி 44, புதூரை சேர்ந்த அமராவதி 45. தேரடி தெருவை சேர்ந்த மணிமேகலா 35, ராகுல் 21 ஆகிய ஏழு பேரும் இந்து ராணியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, இந்து ராணியை தகாத வார்த்தையால் பேசி, அவரை கடத்தி சென்று வெளியே செல்ல விடாமல் அடைத்து வைத்து உள்ளனர். பூஜா ஸ்ரீ யை எங்களிடம் ஒப்படைக்காத போது உன்னையும், உனது மகனையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளார். அங்கு இருந்து தப்பிய இந்து ராணி போலீசில் புகார் செய்தார். போடி தாலுகா போலீசார் தீபா, மணிமாலா, ரஞ்சித்குமார் உட்பட ஏழு பேரை கைது செய்தனர்.