உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  குழாய் உடைந்து குடிநீர் வீண்

 குழாய் உடைந்து குடிநீர் வீண்

-பெரியகுளம்: சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டகுழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் பேரூராட்சி, ஊராட்சி குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரியகுளம் அருகே சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து வடுகபட்டி, தாமரைக்குளம் பேரூராட்சிகள், மேல்மங்கலம், ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, குள்ளப்புரம் ஆகிய ஊராட்சிகளுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இவர்களுக்கு தினமும் நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில் 50 சதவீதம் மட்டுமே வழங்குவதாக புகார் கூறுகின்றனர். இந்நிலையில் பெரியகுளத்திலிருந்து 3 கி.மீ., தூரமுள்ள நந்தவனம் பகுதியில் மெகாகுடிநீர் குழாய் உடைந்து ஏராளமான லிட்டர் குடிநீர் ரோட்டில் சென்று வீணாகிறது. இதனால் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம் செல்லும் பகுதிகளில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் குழாய் உடைப்பை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை