உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இரண்டாம் போக நெல் மகசூல் ஆய்வு வேளாண் துறை அதிகாரிகள் விளக்கம்

இரண்டாம் போக நெல் மகசூல் ஆய்வு வேளாண் துறை அதிகாரிகள் விளக்கம்

கம்பம்: இரண்டாம் போக நெல் சாகுபடியில் குறிப்பிட்ட சில ரகங்களில் மகசூல் அதிகரித்தும், சில ரகங்களில் குறைவாகவும் இருக்கும் என்றும் வேளாண் துறை தெரிவித்துள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப்பெரியாறு பாசனத்தில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் அதிக மகசூல் தரும் வீரிய ஒட்டுரக விதைகளை தனியார் கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர். வேளாண் துறை தரும் விதைகளும் கணிசமாக பயன்படுத்தப்படுகிறது.தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள இரண்டாம் போக அறுவடை இம் மாத இறுதியில் துவங்க உள்ளது. சாகுபடி பகுதிகனை ஆய்வு மகசூல் எப்படி இருக்கும் என்று உத்தேச மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது.கம்பம் வட்டாரத்தில் ஆடுதுறை 54, என். எல்.ஆர் என்ற ரகங்கள் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சின்னமனூர் வட்டாரத்தில் ஆடுதுறை 54, ஆர்.என்.ஆர் என்ற ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோ 52 சிறிதளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது..இதில் ஆடுதுறை 54 எக்டருக்கு 2-5 முதல் 3 டன் வரை கிடைக்கும். இது நல்ல மகசூலாகும். பிற ரகங்கள் சற்று குறைவாகவே கிடைக்கும். முதல் போகத்தில் சாகுபடி செய்ததை தொடர்ந்து இரண்டாம் போகத்தில் சாகுபடி செய்ததினால் இந்த குறைபாடு ஏற்படும் என்று மதிப்பீடு செய்துள்ளனர்.சின்னமனூர் விவசாயிகள் சங்க தலைவர் ராஜா கூறுகையில், சின்னமனூர் வட்டாரத்தில் ஆர்.என்.ஆர். கம்பம் வட்டாரத்தில் என்.எல்.ஆர். ரகங்கள் மகசூல் குறைவாக கிடைக்கும். வேளாண் துறையினர் ஆடுதுறை 54 சாகுபடி செய்ய வலியுறுத்தினார்கள். அவர்கள் சொன்னதை விவசாயிகள் கேட்காததால் இந்த இரண்டாம் போகத்தில் மகசூல் குறையும் என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை