உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  அங்கன்வாடி பணியாளர்கள் தேனியில் உண்ணாவிரதம்

 அங்கன்வாடி பணியாளர்கள் தேனியில் உண்ணாவிரதம்

தேனி: அங்கன்வாடி பணியாளர்களுக்கு புதுச்சேரி போல் ஊதியம் வழங்க வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 6750 வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு ஓராண்டு வழங்க வேண்டும், பண்டிகை கால விடுமுறையை அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே ஐ.சி.டி.எஸ்., ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் மாவட்டதலைவர் சுமதி தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். மாவட்ட செயலாளர் ராதிகா, மாநில துணைச்செயலாளர் வாசுகி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் முகமதுஅலிஜின்னா, மாநில செயலாளர் சென்னமராஜ், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை