உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடுக்கி எஸ்.பி.,க்கு விருது

இடுக்கி எஸ்.பி.,க்கு விருது

மூணாறு : கேரளாவில் திறம்பட செயல்படும் காவல் துறையினருக்கு டி.ஜி.பி.யின் 'பேட்ஜ் ஆப் ஹானர்' எனும் விருது வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். அதன்படி 2022ம் ஆண்டுக்கான பேட்ஜ் ஆப் ஹானர் விருது இடுக்கி எஸ்.பி. விஷ்ணுபிரதீப்க்கு வழங்கப்பட்டது.அவர் கோழிக்கோடு பெரம்பரா பகுதி ஏ.எஸ்.பி.யாக பணியாற்றியபோது தங்கம் கடத்தல் கும்பல் இர்ஷாத் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்த வழக்கை திறம்பட விசாரித்ததற்கு விருது வழங்கப்பட்டது.இவர்,இடுக்கி எஸ்.பி.யாக நவம்பர் 14ல் பொறுப்பேற்றார். 2018ல் ஐ.பி.எஸ். முடித்தவர் ஒற்றபாலம், தலச்சேரி, பெரம்பரா ஆகிய பகுதிகளில் ஏ.எஸ்.பி.யாகவும் ஆயுத படை 4ம் பட்டாலியன் கமாண்டாராகவும் பணியாற்றினர் என்பது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை