உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பா.ஜ., வேட்பாளர் மனு நிராகரிப்பு

 பா.ஜ., வேட்பாளர் மனு நிராகரிப்பு

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் டிச.9ல் நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நவ.14ல் துவங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. நேற்று மனுக்கள் பரிசீலனை நடந்தது. மூணாறு அருகே மலைவாழ் மக்களுக்கு அமைக்கப்பட்ட இடமலை குடி ஊராட்சியில் 14 வார்டுகள் உள்ளன. அங்கு அனைத்து வார்டுகளிலும் பா.ஜ., போட்டியிடுகிறது. அங்கு 7ம் வார்டான பரப்பியாறுகுடியில் பா.ஜ., சார்பில் போட்டியிட பாக்கியலட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்தார். நேற்று நடந்த வேட்பு மனு பரிசீலனையில் பாக்கிய லட்சுமி வேட்புமனுவுடன் டெபாசிட் ரூ.1000 செலுத்தியதற்கான ரசீது இணைக்கவில்லை என தெரியவந்தது. அது குறித்து காங்கிரஸ் ஒன்றிய பொது செயலாளர் நல்லமுத்து, இடமலைகுடி ஊராட்சி தேர்தல் அதிகாரி சரவணனிடம் புகார் அளித்தார். பாக்கியலட்சுமியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை