உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வனத்துறையினர், பொதுமக்கள் மோதல் மாங்குளம் ஊராட்சியில் இன்று பந்த்

வனத்துறையினர், பொதுமக்கள் மோதல் மாங்குளம் ஊராட்சியில் இன்று பந்த்

மூணாறு: மூணாறு அருகே மாங்குளம் பெரும்பன்குத்து நீர்வீழ்ச்சியில் பார்வையாளர் கூடம் அமைத்தது தொடர்பாக வனத்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.மாங்குளம் ஊராட்சியில் பெரும்பன்குத்து நீர்வீழ்ச்சி முக்கிய சுற்றுலா பகுதியாகும். அங்கு பாதுகாப்புடன் நீர்வீழ்ச்சியை காணும் வகையிலும் தேவிகுளம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 2021ல் பார்வையாளர் கூடம் அமைக்கப்பட்டது.அங்கு நேற்று முன்தினம் வந்த குட்டம்புழா வனத்துறை அதிகாரிகள் பார்வையாளர் கூடம் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் கூடம் அமைக்கப்பட்டதாக தெரிவித்தனர். அதனை அமைத்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வனத்துறையினர் பிரச்னை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் பொதுமக்களும், வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது. வனத்துறை தாக்கியதில் மாங்குளம் ஊராட்சி துணைத்தலைவர் பிபின்ஜோசப், உறுப்பினர் அனில்ஆண்டனி பலத்த காயடைந்தனர். இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களை தாக்கிய வனத்துறையினரை கைது செய்யக்கோரி மாங்குளம் வனத்துறை அதிகாரி சுபாஷ் உள்பட வனக்காவலர்களை மாங்குளம் நகரில் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறை வைத்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததால் மக்கள் கலைந்து சென்றனர். மூணாறு போலீசில் இரு தரப்பினரும் அளித்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பந்த்: மாங்குளம் ஊராட்சியில் வனத்துறையினரின் செயலை கண்டித்து இன்று(ஜன.6) பொதுமக்கள் சார்பில் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை பந்த் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ