உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோட்டூர் தானியங்கி பட்டு நுாற்பாலை பிப்ரவரியில் திறக்க முடிவு

கோட்டூர் தானியங்கி பட்டு நுாற்பாலை பிப்ரவரியில் திறக்க முடிவு

தேனி: தேனி ஒன்றியம் கோட்டூரில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பட்டு நுாற்பாலை பிப்ரவரி இறுதியில் திறக்கப்படுவதால் மல்பெரி விவசாயிகள் பயனடையலாம்.' என பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கணபதி தெரிவித்தார்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் பட்டு வளர்ச்சித்துறை கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சியை கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார். பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கணபதி முன்னிலை வகித்தார். கண் காட்சியை விவசாயிகள், தன்னார்வலர்கள் கண்டு பயனடைந்தனர். உதவி இயக்குனர் கூறுகையில், ரூ.4 கோடி மதிப்பில் கோட்டூரில் உருவாகி வரும் தானியங்கி பட்டு நுாற்பாலை பிப்ரவரி இறுதிக்குள் விவசாயிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். இதனால் மல்பெரி விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகள் இங்கேயே கொள்முதல் செய்ய உள்ளோம். விவசாயிகள் பயனடைவார்கள்', என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ