உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வனவிலங்குகள் நடமாட்டம் அறிய சோதனைச்சாவடிகளில் டிஜிட்டல் போர்டு

 வனவிலங்குகள் நடமாட்டம் அறிய சோதனைச்சாவடிகளில் டிஜிட்டல் போர்டு

மூணாறு: வனவிலங்குகள் நடமாட்டம், மேக மூட்டம் அறிந்து பாதுகாப்புடன் பயணத்தை தொடர வசதியாக வனத்துறையினர் முதன்முதலாக செக்போஸ்ட்டுகளில் டிஜிட்டல் போர்டுகள் மூலம் தகவல் அளித்து வருகின்றனர். மூணாறு, உடுமலைபேட்டை மாநில நெடுஞ்சாலையில் மூணாறு முதல் கேரள, தமிழக எல்லையான சின்னார் வரை காட்டு மாடுகள், யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளன. அந்த வழியில் பயணிப்பவர்கள் வனவிலங்குகளிடம் சிக்க நேருவதுடன் கடந்து செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. அதேபோல் அந்த வழியில் அவ்வப்போது மேகங்கள் சூழ்ந்து இருள் போன்ற சூழல் நிலவும் என்பதால் வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன. இதே சூழல் மறையூர், காந்தலூர் ரோட்டிலும் காணப்படுகிறது. அதனால் வனவிலங்குகள் நடமாட்டம், மேக மூட்டம் ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்து பாதுகாப்புடன் பயணத்தை தொடரும் வகையில் வனத்துறையினர் மாநிலத்தில் முதன்முதலாக செக்போஸ்ட்டுகளில் டிஜிட்டல் போட்டுகள் அமைத்து ஆங்கிலம் வாயிலாக தகவல் அளித்து வருகின்றனர். அதன்படி மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் சட்ட மூணாறு செக் போஸ்ட்டில் இரண்டு, மறையூர், காந்தலூர் ரோட்டில் பயஸ் நகர் செக் போஸ்ட்டில் ஒன்று என மூன்று டிஜிட்டல் போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் வெற்றி பெற்றால் அனைத்து செக்போஸ்ட்டுகளிலும் டிஜிட்டல் போர்டுகள் அமைக்கப்படும் என மறையூர் வனத்துறை அதிகாரி சுஹைப் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை