உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  அரசு ஊழியர்களை வீதியில் நிறுத்தியது தான் தி.மு.க.,சாதனை அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பேச்சு

 அரசு ஊழியர்களை வீதியில் நிறுத்தியது தான் தி.மு.க.,சாதனை அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பேச்சு

தேனி: 'நம்பி ஓட்டளித்த அரசு ஊழியர்களை வீதியில் நிறுத்தியது தான் தி.மு.க. அரசின் சாதனை,' என தேனியில் நடந்த ரோடு மறியல் போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தாஜூதீன் பேசினார். அவர் பேசியதாவது: பழனிசாமியை நம்ப வேண்டாம், வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் என அன்றைய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதை நம்பி தி.மு.க.,விற்கு ஓட்டளித்தோம். பல தொகுதிகளில் அரசு ஊழியர்கள் ஓட்டினால் தான் தி.மு.க., கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. ஆனால், நான்கரை ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட எதையும் நிறைவேற்றவில்லை. அவர்கள் 2022ல் நடத்திய வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வெகுவாக பங்கேற்றோம். அப்போது, நிதிநிலை சீரடைந்ததும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி ஏமாற்றிவிட்டனர். டிச., 13ல் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டமும், ஜன., முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி