உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காலாவதி குடிநீர் பாக்கெட் விற்பனை தாராளம்

காலாவதி குடிநீர் பாக்கெட் விற்பனை தாராளம்

போடி : போடி பகுதியில் காலாவதி குடிநீர் பாக்கெட் விற்பனை படுஜோராக உள்ளதால் வாங்கி பருகும் மக்கள் பல்வேறு வகையில் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.போடி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கிய நிலையில் வெயிலின் தாக்கத்தை போக்கிட தண்ணீர் பாக்கெட் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி போடி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள பெட்டி கடைகள், டாஸ்மாக் கடைகளில் ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத தண்ணீர் பாட்டில், பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். சில பகுதிகளில் காலாவதியான, தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகளை விற்பனை செய்கின்றனர். இதை வாங்கி பருகும் மக்களுக்கு வயிற்று போக்கு, சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உருவாகி வருகின்றன. தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகளை சப்ளை செய்வதை தடுத்திட உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை