உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போக்சோ கைதி மீது குண்டாஸ்

போக்சோ கைதி மீது குண்டாஸ்

தேனி: தேனி அல்லிநகரம் அண்ணாநகர் 2வது தெருவை சேர்ந்தவர் பாண்டியன் 46, டீ கடை நடத்தினார். 2022 ல் பிப்.,ல் 4வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததை தொடர்ந்து தேனி மகளிர் போலீசார் இவரை போக்சோவில் கைது செய்தனர்.நிபந்தனை ஜாமினில் வந்த இவர் 2023ல் கோடாங்கிபட்டியில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவனை ஆட்டோவில் அழைத்து சென்று தவறாக நடக்க முயன்றபோது சிறுவனின் தந்தை வந்ததையறிந்து தப்பி ஓடினார். பழனிசெட்டிபட்டி போலீசார் இவரை போக்சோவில் கைது செய்து தற்போது மதுரை மத்திய சிறையில்உள்ளார். இவரை தேனி எஸ்.பி.,சிவபிரசாத் பரிந்துரையில் கலெக்டர் ஷஜீவனா பாண்டியனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை