உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பெரியாறு அணையில் கனமழை; ஒரே நாளில் நீர்மட்டம் 2 அடி உயர்வு

 பெரியாறு அணையில் கனமழை; ஒரே நாளில் நீர்மட்டம் 2 அடி உயர்வு

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 30 மி.மீ., தேக்கடியில் 64.4 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்து வினாடிக்கு 5135 கன அடியாக இருந்தது. இதனால் 137 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து நேற்று மாலை நிலவரப்படி 139 அடியானது. (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 6785 மில்லியன் கன அடியாகும். உப்பார்பட்டி அருகே முல்லைப் பெரியாற்றின் கரைப்பகுதியில் தடுப்பணை சீரமைக்கும் பணிக்காக தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு நவ.20ல் நிறுத்தப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று காலை வினாடிக்கு 400 கன அடி நீர் திறக்கப்பட்டது. நேற்று காலை முழுவதும் அவ்வப்போது கன மழை பெய்ததால் மேலும் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. இரண்டாம் கட்ட வெள்ள எச்சரிக்கை நவ.21ல் நீர்மட்டம் 136 அடியை எட்டிய போது முதல் கட்ட எச்சரிக்கையை கேரள மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் அனுப்பினர். இந்நிலையில் நேற்று நீர்மட்டம் 138 அடியைக் கடந்ததால் இரண்டாம் கட்ட வெள்ள எச்சரிக்கையை அனுப்பினர். நீர்மட்டம் 140 அடியை எட்டும் போது மூன்றாம் கட்ட வெள்ள எச்சரிக்கையும், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். மின் உற்பத்தி துவங்கியது பெரியாறு அணையில் இருந்து கடந்த 4 நாட்களாக நீர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள 400 கன அடி நீர் மூலம் 36 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை