உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விதிகளை பின்பற்றாமல் செங்கரும்பு கொள்முதல் கூட்டுறவு இணைப்பதிவாளருக்கு மெமோ

விதிகளை பின்பற்றாமல் செங்கரும்பு கொள்முதல் கூட்டுறவு இணைப்பதிவாளருக்கு மெமோ

கம்பம் : அரசு விதித்துள்ள நிபந்தனைகள்படி செங்கரும்பு கொள்முதல் இல்லை என்பதை ரேஷன் கடைகளில் நடத்திய ஆய்வின் மூலம் கண்டுபிடித்த கலெக்டர் ஷஜீவனா,தேனி கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமாருக்கு விளக்கம் கேட்டு 'மெமோ' வழங்கி உள்ளார்.பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, முழு செங்கரும்பு ஒன்று, ரூ.ஆயிரம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஜன.10 முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வினியோகம் துவங்கியது. செங்கரும்பு கொள்முதல் கூட்டுறவு துறை அலுவலர்கள் மேற்கொண்டனர். மாவட்டத்தில் பல ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட செங்கரும்பு அரசு நிபந்தனைப்படி 6 அடி உயரம் இல்லை என புகார் எழுந்தது.இந்நிலையில் ஜன. 11 ல் சீலையம்பட்டி ரேஷன் கடையினை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார். அக் கடைக்கு வழங்க வேண்டிய 784 செங்கரும்பிற்கு பதிலாக 700 இருந்ததும். உயரம் குறைந்த, திரட்சி இல்லாத கரும்பு இருந்ததை கண்டு பிடித்து கண்டித்தார். உத்தமபாளையத்தில் ஒரு ரேஷன் கடையில் ஆய்வு செய்த போது தரமில்லாத கரும்பு கொள்முதல் செய்து வினியோகிக்கப்பட்டது தெரிந்தது. இதில் அதிருப்தி அடைந்த கலெக்டர், அரசின் நிபந்தனைகள் படி கொள்முதல் மேற்கொள்ள வில்லை. அரசின் விதியினை பின்பற்றாமல் கரும்பு சப்ளை செய்தது ஏன் என விளக்கம் கேட்டு கூட்டுறவு இணைப்பதிவாளருக்கு கலெக்டர் 'மெமோ' வழங்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை