| ADDED : மார் 21, 2024 02:46 AM
கம்பம்: காதணி விழா, வசந்த விழா, கிடாவெட்டு நிகழ்ச்சிகளை கண்காணிக்க உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றப்படுவதை தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். கிடா வெட்டு, காதணி விழா, வசந்த விழா போன்ற நிகழ்ச்சிகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இந் நிகழ்ச்சிகளில் பணப் பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும். அத்தோடு பறக்கும் படையினரையும் இது போன்ற நிகழ்ச்சிகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் வரும் வரை இந்த பணியில் கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து விசேஷங்கள் நடைபெறுவதை தெரிவிக்க மண்டப உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.