உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  25 தொகுதிகளில் பூத் கமிட்டி அமைப்பதில் ந.ம.-மு.க. தீவிரம்

 25 தொகுதிகளில் பூத் கமிட்டி அமைப்பதில் ந.ம.-மு.க. தீவிரம்

கம்பம்: தமிழகத்தில் நமது மக்கள் முன்னேற்ற கழகம் 25 தொகுதிகளில் கவனம் செலுத்தி தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். 2026 சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தீவிரமாக நடந்து வருகிறது, மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பை காட்டி வருகின்றனர். குறிப்பாக தி.மு.க. அ.தி.மு.க. பா.ஜ. ஆகிய மூன்று அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. நடிகர் விஜய்யின் கட்சியில் பெரிய வேகம் இல்லை. மதுரையில் உதித்த நமது மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய அரசியல் கட்சியின் செயல்பாடுகள் வேகமாக உள்ளன. இதன் நிறுவன தலைவராக தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஜெகநாத் மிஸ்ரா அரசியல் பின்புலம் கொண்டவர். நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர். பின்னர் தே.மு.தி.க. வில் மாவட்ட, மாநில பொறுப்புகளை வகித்துள்ளார். 2014 ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கம்பம் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டு 12 ஆயிரம் ஓட்டுக்களை பெற்றார். தற்போது தனியாக அரசியல் கட்சியை துவக்கி உள்ளார். மதுரை, சேலம், தேனியில் மாநாடுகள் , பேரணிகளை நடத்தியுள்ளார். கம்பம், போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, அருப்புக்கோட்டை , விருதுநகர், பழநி, உடுமலை, பொள்ளாச்சி, கோவை, திருச்சி, சேலம் , திருப்பூர், நிலக்கோட்டை, சிவகங்கை காரைக்குடி, நத்தம், மேட்டுப்பாளையம், மணப்பாறை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், சென்னை ஆர்.கே நகர், அரூர், கோவில்பட்டி ஆகிய 25 தொகுதிகளை தேர்வு செய்து, இக்கட்சி களம் இறங்கியுள்ளது. இந்த தொகுதிகளில் பூத் கமிட்டி அமைத்தல், வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தலில் தீவிரமாக உள்ளனர். இந்த 25 தொகுதிகளில் கொரோனா காலத்தில் செய்த நற்காரியங்களை நினைவு படுத்தியும் மழை புயல் வெள்ள பாதிப்பின் போது செய்த உதவிகளையும் நினைவு படுத்தி வருகிறார். இவரின் களப்பணி எந்த அளவிற்கு கை கொடுக்கும் என தெரியவில்லை. ஆனால் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் இந்த 25 தொகுதிகளில் இக்கட்சி தலைவலியாக இருக்க வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை