| ADDED : நவ 25, 2025 01:28 AM
தேனி: ஐயப்ப பக்தர்களின் வருகையை பொறுத்து ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்த முடிவு செய்துள்ளாதாக போலீசார் தெரிவித்தனர். சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை காலம் துவங்கி உள்ளது. தொடர்ந்து 2026 ஜன.,ல் மகர விளக்கு பூஜை நடக்கிறது. இதற்காக தேனி மாவட்டம் வழியாக பிற மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் செல்வது வழக்கம். குமுளி மலைப்பாதையில் விபத்துக்களை தவிர்க்க ஒருவழிப்பாதை திட்டம் செயல்படுத்தப்படும். அப்போது ஐயப்ப பக்தர்கள் செல்லும் வாகனங்கள் தமிழகத்தில் இருந்து கம்பம் மெட்டு வழியாக சென்று, குமுளி வழியாக திரும்பும். சபரிமலை சீசன் துவங்கி சில நாட்களில் இந்த ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்படும். ஆனால், இந்தாண்டு இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஜன.,ல் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மண்டல பூஜை காலத்தில் பக்தர்களின் வாகனங்கள் அதிக அளவில் சென்றால், அதற்கேற்ப ஒருவழிப்பாதை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றார்.