உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  குமுளியில் புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு மின் இணைப்பு இன்றி ஜெனரேட்டரில் இயக்கம்

 குமுளியில் புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு மின் இணைப்பு இன்றி ஜெனரேட்டரில் இயக்கம்

கூடலுார்: குமுளியில் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் நேற்று திறப்பு விழா காணப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது. தமிழக கேரள எல்லையில் குமுளி அமைந்துள்ளது. கூடலுார் நகராட்சியின் 21வது வார்டு பகுதியாகும். கேரள பஸ் ஸ்டாண்ட் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடியதாக இருக்கிறது. ஆனால் தமிழகப் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் வசதியில்லாமல் ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தப்பட்டு வந்தன. இதனால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வந்தது. மேலும் சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜை நேரங்களில் நெரிசல் அதிகரித்தது. அடிப்படை வசதிகளின்றி பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால் அனைத்து வசதிகளுடன்கூடிய புது பஸ் ஸ்டாண்ட் கட்ட பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை சார்பில் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளுக்காக 2023 செப். 11ல் பூமி பூஜை நடந்தது. 18 வணிக வளாகங்கள், 11 பயணிகள் தங்கும் அறை, 2 நவீன கழிப்பறை வளாகங்கள், உணவு விடுதி, ஓட்டுநர் நடத்துனர்களுக்கு ஓய்வு அறை உள்ளிட்ட அடிப்படை வசதியுடன் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. இதனை நேற்று தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தனர். கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.. மகாராஜன் முன்னிலை வகித்தனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போக்குவரத்து துறை மதுரை மண்டல மேலாண்மை இயக்குனர் சரவணன், பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், கூடலுார் நகராட்சி தலைவர் பத்மாவதி, கமிஷனர் முத்துலட்சுமி, தி.மு.க. நகரச் செயலாளர் லோகந்துரை கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை