உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சந்தனமரங்கள் கடத்தல் வழக்கு பதிவு செய்ய போலீஸ் தாமதம்

 சந்தனமரங்கள் கடத்தல் வழக்கு பதிவு செய்ய போலீஸ் தாமதம்

பெரியகுளம்: பெரியகுளத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள 13 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் வழக்கில் போலீசார் வழக்கு பதியாமல் குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ளனர். பெரியகுளம் கீழ வடகரை காடுபட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி வாசுதேவன் 45. இவரது தென்னந்தோப்பு பகுதியில் பறவைகள் எச்சத்தினால் ஏராளனமான தானாக வளர்ந்த சந்தனமரங்கள்உள்ளது. இவரது தோட்டத்தில் செப்.28ல் மர்மநபர்கள் 15 வயதுடைய 8 சந்தனமரங்களை வெட்டி கடத்தினர். இதேபோல் அடுத்தடுத்த இரு தோட்டங்களில் 5 மரங்கள் என கோடிக்கணக்கான மதிப்புடைய 13 சந்தன மரங்களை கடத்தியுள்ளனர். தோட்டங்களில் சந்தனமரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வாசுதேவன் அக்., மாதம் வடகரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். சந்தன மரங்கள் வெட்டி கடத்தலில் இது வரை போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் என்ன காரணத்தினாலோ மவுனம் காத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயி போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடந்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். பட்டா நிலத்தில் வளரும் சந்தன மரங்கள் திருட்டு வனத்துறைக்கு உட்படாது என தேவதானப்பட்டி வனத்துறையினர் கைவிரித்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை