உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

டிரைவரை தாக்கிய மூவர் மீது வழக்குதேனி: வடபுதுப்பட்டி எம்.ஜி.ஆர்., காலனி டிராக்டர் டிரைவர் சந்திரன் 52. இவர் வடபுதுப்பட்டி கோழி இறைச்சிக் கடை அருகே உள்ள கடைக்குச் சென்றார். அடையாளம் தெரியாத மூவர், கைகளால் தாக்கி, கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் சந்திரன் காயம் அடைந்தார். அல்லிநகரம் போலீசார் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.பெண் தற்கொலைதேனி: சுருளிபட்டி கிழக்குத்தெரு ஈஸ்வரன் 61. இவரது மனைவி ராஜாத்தி 50. இவர்களது மகன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தனது தாய்க்கு விருப்பம் இல்லாத, அதே ஊரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார். இதனால் மனக்குழப்பத்தில் ராஜாத்தி இருந்தார். மகள் வீட்டிற்கு சென்றவர், மகள், மருமகன் கோயிலுக்கு சென்ற நேரத்தில் வராண்டாவில் துாக்கிட்டார். உடலை இறக்கி, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியில் இறந்ததாக தெரிவித்தனர். ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ