உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

புகையிலை விற்ற இருவர் கைதுதேனி: தேனி - பெரியகுளம் ரோடு ராஜாலயன் உதயகுமார் 36. பழனிசெட்டிபட்டி பழனியப்பா நகர் நேதாஜி தெரு முனியாண்டி 33. இருவரும் ரூ.16,430 மதிப்புள்ள 12.124 கிலோ கிராம் எடையுள்ள போதை புகையிலை பொருட்களை விற்பனை செய்தனர். உதயக்குமார், முனியாண்டி ஆகிய இருவரை தேனி போலீசார் கைது செய்து, புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.டிரைவர் மனைவி மாயம்கம்பம் சவுடம்மன் கோயில் தெரு செந்தில்குமார் 41. ஆக்டிங் டிரைவர். இவரது மனைவி கார்த்திகா 31. இருவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கார்த்திகா, ரம்யா என்பவரின் அழகு நிலையத்தில் ஒரு மாதமாக பணிபுரிந்தார். செந்தில்குமார் மார்ச் 8 ல் மனைவியை அழகு நிலையத்தில் இறக்கி விட்டு வேலைக்கு சென்றார். அன்று மாலை மனைவியை அலைபேசயில் அழைத்த போது, அலைபேசி ஸ்சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மனைவியை தேடி கிடைக்காததால் உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை