| ADDED : நவ 21, 2025 05:20 AM
பெண் தற்கொலை
தேனி: அல்லிநகரம் வெங்கலாகோயில் முதல் தெரு வீரம்மாள் 80. இவர், பால்பண்ணை நடத்தி வரும் மகன் பெரியகருப்பனுடன் வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்தார். மகன் விசாரித்தபோது விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார். தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டார். பின் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மது குடிக்க பணம் கேட்டு தகராறு
தேனி: அல்லிநகரம் அம்பேத்கர் வடக்குத்தெரு முத்து 29. கொத்தனார். இவர் தேனி நேரு சிலை பின்புறம் கடைக்கு சென்றபோது, அல்லிநகரம் தெற்குத்தெரு சோனைமுத்து மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். பின் கத்தியால் தாக்கி காயப்படுத்தினார். இதில் முத்துவிற்கு காயங்கள் ஏற்பட்டது. தேனி மருத்துவக்கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டார். புகாரில், சோனைமுத்து மீது தேனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கணவன் மாயம்: மனைவி புகார்
தேனி: பழனிசெட்டிபட்டி தென்றல் நகர் கார்த்திகேயன் 46, இவரது மனைவி துர்காதேவி 29. இருவரும் பில்டிங் காண்ட்ராக்டர் தொழில் செய்து வந்தனர். நவ.17 ல் இன்ஜினியரை பார்த்துவிட்டு வருவதாக மனைவியிடம் தெரிவித்து சென்றவர் வீடு திரும்ப வில்லை. அலைபேசிக்கு மனைவி தொடர்பு கொண்டார், ஸ்சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. நவ.19ல் மனைவி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் காணாமல் போன கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.