| ADDED : ஜன 26, 2024 01:36 AM
கம்பம்:தேனி மாவட்டம் கம்பம் எஸ்.பி., சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் ராயமுத்து 60, ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனார்.குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 20 போலீஸ் அதிகாரிகள் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கம்பத்தை சேர்ந்த எஸ்.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ராயமுத்து விற்கு மெச்சத் தகுந்த பணியாற்றியமைக்கு விருது வழங்கப்பட உள்ளது. இவர் எஸ்.ஐ.,யாக பணியாற்றிய காலத்திற்கு இந்த விருது கிடைத்துள்ளது.கம்பம் அருகே உள்ள ஆங்கூர் பாளையத்தை சேர்ந்த இவர் 1988ல் கான்ஸ்டபிளாக சேர்ந்தார். 1997ல் எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவில் சேர்ந்தார். தொடர்ந்து சி.ஜ.டி. பிரிவில் 26 ஆண்டுகளாக எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்றியுள்ளார். இன்ஸ்பெக்டராக கடந்த மாதம் பதவி உயர்வு பெற்று தற்போது திருச்சி மண்டலத்தில் பணியில் உள்ளார். இவரது மனைவி ஜெயரூபி தலைமையாசிரியையாக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.