உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆக்கிரமிப்பு அகற்ற க்கோரி தர்ணா

 ஆக்கிரமிப்பு அகற்ற க்கோரி தர்ணா

தேனி: தேனி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி ஆர்.சி., தெரு தோமஸ். இவர் அத்தெருவில் பொது நடைபாதையை ஆக்கிரமித்து கடை நடத்தி வந்தார். ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி அத்தெரு மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். கலெக்டர் உத்தரவில் தேனி தாசில்தார் சதிஷ்குமார், பி.டி.ஓ., மைதிலி ஆக்கிரமிப்பை ஆய்வு செய்து உறுதி செய்தனர். பின், தோமஸூக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில், நவ.13 மாலைக்குள் ஆக்கிரமிப்பை தானாகவே அகற்றிட வேண்டும். மீறினால் அகற்றி அதற்கான தொகை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தோமஸ், கடையை அகற்ற ஒருவாரம் கால அவகாசம் வழங்க பி.டி.ஓ.,விடம் கடிதம் வழங்கினார். அப்பகுதி மக்கள் நேற்று நாட்டுமாடு நலச்சங்கம் மாநிலத் தலைவர் கலைவாணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஒருவார காலத்திற்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என தெரிவித்த பின் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை