உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அனுமதி இன்றி மரங்கள் அகற்றம்

அனுமதி இன்றி மரங்கள் அகற்றம்

தேனி, : தேனி கே.ஆர்.ஆர்., நகர் 3வது தெருவில் மின் ஒயருக்கு இடையூறு ஏற்படுவதாக மரங்களை நகராட்சி, வனத்துறை அனுமதி இன்றி வேரோடு அகற்றினர்.கே.ஆர்.ஆர்., 3வது தெருவில் 3 வீடுகளின் வாசலில் 2 மரங்கள் வளர்ந்திருந்தன. வீட்டின் உரிமையாளர்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு மரங்கள் இடையூறாக இருப்பதாக புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் மின்வாரிய அதிகாரிகள் கே.ஆர்.ஆர்., நகரில் உள்ள 2 மரங்களை மின்வாரிய ஊழியர்கள் வெட்டி அகற்றியுள்ளனர். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர்களோ, மின்வாரிய அதிகாரிகளோ உரிய முறையில் நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்காததால், இன்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி பொறியாளர் முருகன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை