| ADDED : ஆக 02, 2011 11:43 PM
தேனி : ஜெயமங்கலம் பகுதிகளில் உள்ள கிராமங்களில் போலி டாக்டர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, வடுகபட்டி, துலுக்கபட்டி கிராமங்களில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு மட்டுமே படித்த பலர், அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களது சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பலர், போலீசாரிடம் புகார் கூறியுள்ளனர். ஆனாலும் போலீசார் போலி டாக்டர்களை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக துலுக்கப்பட்டி பள்ளிவாசல் தெருவில், ஒரு பெண்ணும், இந்திரா காலனியில் வடுகப்பட்டியை சேர்ந்த ஒருவரும், மாலை நேரங்களில் இது போல் சிகிச்சை அளிக்கின்றனர். எனவே இவர்களால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கலெக்டர், எஸ்.பி., இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, போலி டாக்டர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.