உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாட்டுபட்டியில் ஹைடல் சுற்றுலா படகு மையத்தில் சோதனை

மாட்டுபட்டியில் ஹைடல் சுற்றுலா படகு மையத்தில் சோதனை

மூணாறு: மாட்டுபட்டி அணையின் நுழைவு பகுதியில் ஹைடல் சுற்றுலா சார்பிலான பெடல் படகு மையத்தில் விஜிலென்ஸ் போலீசார் சோதனையிட்டனர்.மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். அங்கு ஹைடல் சுற்றுலா, மாவட்ட சுற்றுலா துறை ஆகியோர் சார்பில் சுற்றுலா படகுகள் இயக்கப்படுகின்றன.அணையின் நுழைவு பகுதியில் ஹைடல் சுற்றுலா சார்பில் பெடல் படகுகள் இயக்கப்படுகின்றன. அதில் ஒரு குழந்தையுடன் இருவருக்கு ரூ.400, குழந்தையுடன் நான்கு பேருக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கின்றனர். அதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது. அங்கு மின் துறையின் விஜிலென்ஸ் பிரிவு டி.எஸ்.பி., ஷானிஹான் தலைமையில் நேற்று முன்தினம் சோதனை நடந்தது. அதில் படகு சவாரி செய்வோரின் பெயர் உள்பட தகவல்கள் படிவத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் டிக்கெட் வழங்கப்படவில்லை எனவும் அதன் மூலம் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்தது. அது தொடர்பாக பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை