உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  அனைத்து பெரியாறு பூர்வீக பாசன விவசாயிகளின் கூட்டமைப்பு துவக்கம் கூடலுாரில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம்.

 அனைத்து பெரியாறு பூர்வீக பாசன விவசாயிகளின் கூட்டமைப்பு துவக்கம் கூடலுாரில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம்.

கூடலுார்:தென் மாவட்டங்களில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும் ஒருங்கிணைந்து 'அனைத்து பெரியாறு பூர்வீக பாசன விவசாயிகளின் கூட்டமைப்பு' என்ற புதிய அமைப்பை துவக்க கூடலுாரில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 2 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நிலங்கள் உள்ளன. அணையில் 142 அடி நீர் தேக்க 2014ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடி தேக்கிக்கொள்ளலாம் என அந்த உத்தரவில் கூறப்பட்டது. ஆனால் கேரளாவில் 142 அடி நீர் கூட தேக்க முடியாமல் ரூல்கர்வ் நடைமுறையை பின்பற்றி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தனித்தனியாக விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்துவதால் வெற்றி பெற முடியவில்லை. அதனால் அனைத்து விவசாய சங்கங்களும் ஒருங்கிணைந்து ஒரே அமைப்பை உருவாக்கி செயல்பட முடிவு செய்யப்பட்டது. நேற்று கூடலுாரில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பெரியாறு அணையின் உரிமையை நிலைநாட்டவும் அனைத்து விவசாய சங்கங்களும் ஒருங்கிணைந்து 'அனைத்து பெரியாறு பூர்வீக பாசன விவசாயிகளின் கூட்டமைப்பு' என்ற அமைப்பை உருவாக்க வேண்டும். அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ரூல்கர்வ் முறையால் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக அரபிக் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும். அணையில் மத்திய பாதுகாப்பு படையை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முல்லைப் பெரியாறு நீரினை பயன்படுத்துவோர் விவசாய சங்க தலைவர் சுகுமாரன், சின்னமனூர் விவசாய சங்க தலைவர் ராஜா, கம்பம்பள்ளத்தாக்கு விவசாய சங்க துணை தலைவர் விஜயராஜன், மேலூர் விவசாய சங்க தலைவர் முருகன், சீலையம்பட்டி விவசாய சங்க தலைவர் ஆம்ஸ்ட்ராங், கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்க செயலாளர் ஜவஹர் அலி, துணைத் தலைவர் நாராயணன், இரு போக விவசாய சங்க தலைவர் முருகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை