உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  அக்காவின் கணவரை கொலை செய்த மைத்துனருக்கு ஆயுள்; தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

 அக்காவின் கணவரை கொலை செய்த மைத்துனருக்கு ஆயுள்; தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

தேனி: தேனி மாவட்டம் சங்ககோணாம்பட்டியில் இடத்தகராறில் மிளகாய் பொடி துாவி, அக்கா கணவர் ஜெயபாலனை 48, கொலை செய்த மைத்துனர் ஜெயராமனுக்கு 45, ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயராமன் மனைவி முத்துப்பிரியா விடுவிக்கப்பட்டார். பெரியகுளம் ஒன்றியம் சருத்துப்பட்டி வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் தங்கமலை 46. இவரது கணவர் ஜெயபாலன் 48. தங்கமலைக்கு சொந்தமான 2 சென்ட் 40 சதுரடி உள்ள காலியிடம் சங்கக்கோணாம்பட்டி தெற்குத்தெருவில் உள்ளது. இந்நிலத்தை அல்லிநகரம் ராஜபாண்டி மகன் மணிவண்ணனுக்கு விற்றார். இதை அறிந்த தங்கமலையின் இளைய சகோதரர் ஜெயராமன், மணிவண்ணனை மிரட்டினார். பின் 2022 அக்., 27ல் தங்கமலை, அவரது கணவர் ஜெயபாலன், நிலத்தை வாங்கிய மணிவண்ணன், அவரது மனைவி செல்லக்கண்ணு உள்ளிட்ட நால்வரும் காலியிடத்தில் கல் ஊன்ற ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற ஜெயராமன், மணிவண்ணனை மிரட்டி தகராறில் ஈடுபட்டார். ஜெயராமன் மனைவி முத்துப்பிரியா மிளகாய் பொடியை எடுத்து தங்கமலை, அவரது கணவர் ஜெயபாலன் மீது துாவினார். பின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயராமன், ஜெயபாலனை குத்தி கொலை செய்தார். பின் ஜெயராமனும், அவரது மனைவியும் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தங்கமலை அளித்த புகாரின்படி ஜெயராமன், முத்துப்பிரியாவை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் குருவராஜ் ஆஜரானார். ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார். முத்துப்பிரியாவை விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை