| ADDED : டிச 01, 2025 06:21 AM
கம்பம்: ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் கம்பமெட்டு ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணி கட்டி ஆலமரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த நவீன சொகுசு காரை சோதனை செய்தனர். அதில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 57 கிலோ கஞ்சா, 28 பண்டல்களில் இருந்தது கண்டறியப்பட்டது. கடத்தி செல்பவர்கள் கேரள மாநிலம் ஈராத்து பேட்டை முகமது சி ஜாஸ், கம்பமெட்டு அருகில் உள்ள காஞ்சாரை சேர்ந்த ஆசாத், எர்ணாகுளத்தை சேர்த்த நியாஸ் என, தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், 3 அலைபேசிகளை கைப்பற்றி, விசாரிக்கின்றனர்.