ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் அனைத்து கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்ற விஜயகாந்த் புகழ் அஞ்சலி பொதுக்கூட்டம் எஸ்.ரெங்கநாதபுரத்தில் நடந்தது.தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் டிச., 28 ல் மறைந்தார். தே.மு.தி.க.,ஏற்பாடு செய்த அஞ்சலி கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல் பாண்டியன் வரவேற்றார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன், ஜெ., பேரவை மாநில இணைச் செயலாளர் ஜெயக்குமார், பா.ஜ., அரசு வழக்கறிஞர் குமார், தி.மு.க.,ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் அணி செயலாளர் மணி, மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூ.,மாவட்ட செயற்குழு பரமேஸ்வரன், நகர் குழு முனீஸ்வரன், பா.பி.,மாவட்ட தலைவர் தங்கபாண்டியன் உட்பட பலர் பங்கேற்று விஜயகாந்த் படத்திற்கு மரியாதை செய்தனர். ஏற்பாடுகளை ம.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.