தேனி, : தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, சுவாமி விவேகானந்தரின் 161வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து, மரியாதை செலுத்தினர்.ஆர்.எஸ்.எஸ், அமைப்பின் கிளை அமைப்பான சஹகார் பாரதியின் மாநில பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பா.ஜ., வர்த்தகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் வரவேற்றார். ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் முருகன், மாவட்டத் தலைவர் ஜெயப்பிரகாஷ், முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் உமையராஜ், ஆர்.எஸ்.எஸ்., தேனி நகரத் தலைவர் ராமசுப்பிரமணி, பா.ஜ., விஜயகுமார் பேசினர். மூத்த பொறுப்பாளர் சேகர், பா.ஜ., நகரத் தலைவர் மதிவாணன், வி.ஹெச்.பி., மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்குமார், பா.ஜ., நகர பொதுச் செயலாளர் ஜெயமுருகன், நகரத் துணைத் தலைவர் சிவக்குமார், அமைப்பு சாரா பொறுப்பாளர் மணிகண்டன், ஹிந்து முன்னணி மாவட்ட நிர்வாகி திலகராஜ் பங்கேற்றனர். மாவட்ட ஹிந்து எழுச்சி முன்னனி சார்பில், பொம்மையக்கவுண்டன்பட்டி அலுவலகத்தில் விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது.மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பின் தேனி, வீரபாண்டி பகுதிகளில் குளிரால் வாடும் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற ஏழைகளுக்கு போர்வைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் தேனி நகரச் செயலாளர் தினேஷ், நகர செயற்குழு உறுப்பினர்கள் மணிபிரபு, மணிகண்டன், சசி, உத்தமபாளையம் ஒன்றியத் தலைவர் இளம்பரிதி பங்கேற்றனர்.