மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் தனசிங் 58, மர்மமான முறையில் இறந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி., உயர் அதிகாரிகள் நேற்று சம்பவயிடத்தில் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மே 2 ல் மாயமானார். மே 4 வீட்டுத் தோட்டத்தில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். எஸ்.பி., சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படையினர் விசாரித்தும் துப்பு துலங்காததால் விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி. முத்தரசி விசாரித்து வருகிறார்.ஜெயக்குமார் இறந்த வழக்கு மே 23 சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டும் 20 நாட்களாக உயரதிகாரிகள் வரவில்லை. கூடுதல் டி.ஜி.பி., வெங்கட்ராமன், ஐ.ஜி., அன்பு நேற்று திருநெல்வேலி வந்தனர். காலை அலுவலகத்தில் ஆலோசனை செய்த பிறகு மதியம் 3:20 மணிக்கு கரைசுத்துபுதூருக்கு சென்றனர்.ஜெயக்குமாரின் மூத்த மகன் கருத்தையா ஜெப்ரினிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். பின் ஜெயக்குமார் வீட்டில் மனைவி, இரண்டாவது மகன் உள்ளிட்ட குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.ஜெயக்குமார் இறந்து கிடந்த இடம், தோட்டத்து கிணறு உள்ளிட்ட இடங்களில் சம்பவத்தன்று எடுக்கப்பட்ட படங்களை லேப்டாப் மூலம் போலீசார் அவர்களுக்கு விளக்கினர். மாலை 6:00 மணிக்கு அங்கிருந்து அவர்கள் திருநெல்வேலி சென்றனர்.ஜூன் 20 தமிழக சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது. அதில் அ.தி.மு.க., காங்., பா.ஜ., உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பக்கூடும். அவர்களுக்கு பதில் அளிக்க புள்ளி விபரங்களை உயரதிகாரிகள் நேற்று சேகரித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தி.மு.க.,வுக்கு நெருக்கடி தரும் வகையில் காங்., கேள்விகளை எழுப்பினால் ஜெயக்குமார் இறப்பின் பின்னணியை வெளியிடவும் வாய்ப்புள்ளது.
29-Sep-2025
25-Sep-2025