உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை; பார்க்க அனுமதி

 மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை; பார்க்க அனுமதி

திருநெல்வேலி: மாஞ்சோலை பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி மாஞ்சோலையில் 88 மி.மீ. ஊத்து எஸ்டேட்டில் 118 மி.மீ. நாலுமுக்குவில் 106 மி.மீ, காக்காச்சியில் 92 மி.மீ.. மழையளவு பதிவானது. இதனால் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு காரணங்களால் பொதுமக்கள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். அருவியினை பார்வையிடுவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை