உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பெண்ணிடம் சில்மிஷம் வன ஊழியர் சஸ்பெண்ட்

பெண்ணிடம் சில்மிஷம் வன ஊழியர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு மலைப்பகுதி மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில், தொழிலாளி ஒருவர் மனைவியுடன் வசிக்கிறார். அக்., 23ல் மளிகை பொருட்கள் வாங்க கல்லிடைக்குறிச்சிக்கு தொழிலாளி சென்றார். அப்போது, மாஞ்சோலை வனத்துறையில் வாட்சராக பணிபுரியும் அய்யாகுட்டி, 49, வீட்டில் தனியாக இருந்த தொழிலாளியின் மனைவியிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றார். தொழிலாளி புகாரின்படி, மாஞ்சோலை போலீசார் அய்யாகுட்டியை கைது செய்தனர். அவரை, களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை