உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  ஹோட்டல் முன் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

 ஹோட்டல் முன் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

திருநெல்வேலி: மேலப்பாளையத்தில் ஹோட்டல் முன் திடீரென வைக்கப்பட்ட விநாயகர் சிலையை வருவாய் துறையினர் அகற்றினர். திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில், உச்சி மாகாளி என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். கடையின் முன் நேற்று முன்தினம் இரவு, விநாயகர் சிலையை வைத்தார். தகவல் அறிந்த வருவாய் துறையினர், தாசில்தார் இசைவாணி தலைமையில் வந்து, விநாயகர் சிலையை இரவில் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தன் குடும்ப பரிகாரத்திற்காக சிலை வைத்திருப்பதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்தார். ஆனால், பொது இடத்துக்கு அருகில் வழிபாட்டு சிலைகளை நிறுவுவதற்கு, கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை