| ADDED : நவ 15, 2025 01:29 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி கே.டி.சி. நகரில் ஜூலை 27ல் நடந்த காதல் பிரச்னையில் ஐ.டி., ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கவின் காதலியின் சகோதரர் சுர்ஜித், தந்தை எஸ்.ஐ., சரவணன், உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். காதலியின் தாயார் எஸ்.ஐ., கிருஷ்ணகுமாரி கைதுசெய்யப்படவில்லை. இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.,யினர் விசாரித்து வருகின்றனர். குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம் பெற்றுள்ள நிலையிலும் எஸ்.ஐ., கிருஷ்ணகுமாரி கைது செய்யப்படவில்லை. இவ்வழக்கில் அவர் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருநெல்வேலி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். மேலும் நவ., 28 ல் கிருஷ்ணகுமாரி யை கண்டிப்பாக ஆஜர்படுத்தவும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில் சிறையில் உள்ள ஜெயபால் தாக்கல் செய்த ஜாமின் மனு தொடர்பாக கவின் குடும்பத்தினர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நவ.19க்கு ஒத்திவைத்தார்.