உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தற்காலிக டிரைவர்களால் அரசு பஸ்கள் விபத்து

தற்காலிக டிரைவர்களால் அரசு பஸ்கள் விபத்து

திருநெல்வேலி:அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் ஸ்டிரைக் நடந்த நிலையில், சில தடங்களில் பஸ்கள், தற்காலிக டிரைவர்களால் இயக்கப்பட்டன. வண்ணாரப்பேட்டை போக்குவரத்து பணிமனையில் இருந்து தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் கார் மீது மோதியது.அந்த காரை ஓட்டியவர், காரை டிப்போவில் நிறுத்தி வாக்குவாதம் செய்தார். தங்களுக்கும், விபத்துக்கும் தொடர்பில்லை என அதிகாரிகள் கூறினர்.தற்காலிக டிரைவரே, அந்த கார் உரிமையாளரிடம் சமாதானம் பேசி தானே பழுதை சரி செய்து தருவதாக கூட்டிச் சென்றார். இது போல, மற்றொரு இடத்திலும் தற்காலிக டிரைவர் ஓட்டிய அரசு பஸ், கண்ணாடி உடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி