உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  ரூ.26 லட்சம் மோசடி ஒருவர் கைது

 ரூ.26 லட்சம் மோசடி ஒருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி பாரதியார்நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் 54. இவரிடம் திருநெல்வேலி டவுனை சேர்ந்த சையது அகமது கபீர் 41, என்பவர் இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் தான் நிர்வாக அதிகாரியாக இருப்பதாகவும், அங்கு கோபாலகிருஷ்ணனின் மகளுக்கு வேலை வாங்கி தருவதாகவும் கூறி ரூ.26 லட்சத்து 25 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. சையது அகமது கபீர் இ.எஸ்.ஐ நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என தெரிய வந்தது. எஸ்.பி. சிலம்பரசனிடம் கோபாலகிருஷ்ணன் புகார் செய்தார். சையது அகமது கபீர் மீது மோசடி வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை