உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குரூப்-1 தேர்வில் 1,619 பேர் ஆப்சென்ட்

குரூப்-1 தேர்வில் 1,619 பேர் ஆப்சென்ட்

திருவள்ளூர்:திருவள்ளூரில் நடந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு-1ல், 1,619 பேர் தேர்வு எழுத வரவில்லை.திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணி தொகுதி--I தேர்வு நடந்தது. மாவட்டம் முழுதும், 13 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. திருவள்ளூர் சி.எஸ்.ஐ., கவுடி மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.அவர் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் 4,313 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,694 பேர் தேர்வில் பங்கேற்றனர். 1,619 பேர் தேர்வு எழுதவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ