உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 2022-ல் துார்வார இடிக்கப்பட்ட குளக்கரை சீரமைக்கப்படுமா?

2022-ல் துார்வார இடிக்கப்பட்ட குளக்கரை சீரமைக்கப்படுமா?

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அஸ்வரேவந்தாபுரம் கிராமத்தின் மேற்கில், சித்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, பொன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பின்புறம் குளம் உள்ளது. இந்த குளம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துார் வாரி சீரமைக்கப்பட்டது.குளம் துார் வாரும் பணிக்காக, இயந்திரங்கள் உள்ளே செல்ல ஏதுவாக, குளத்தின் தென்மேற்கில் குளக்கரை இடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து குளம் துார் வாரி சீரமைக்கப்பட்டது. ஆனால், இடிக்கப்பட்ட குளக்கரை இதுவரை சீரமைக்கப்படவில்லை. வரும் மழைக்காலத்தில் குளம் நிரம்பினால், கரை இடிக்கப்பட்டுள்ள பகுதி வழியாக நீர் வெளியேறக்கூடும். இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளக்கரையை தற்போது சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை