| ADDED : ஜூன் 24, 2024 11:34 PM
திருவள்ளூர் : மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில், 22 பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் நிறுவனத்தின் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில், அமேசான், பிரைட் பியூச்சர், டாக்டர் ரெட்டி பவுண்டேஷன், இந்துஜா லேலண்ட் பைனான்ஸ் லிமிடெட், மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன் உள்ளிட்ட பிரபல கம்பெனிகள் கலந்து கொண்டன. இதில், 108 ஆண், 59 பேர் கலந்து கொண்டனர். இதில், 22 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சீனிவாசன், மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குநர் விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.