உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கடம்பத்துார்:கடம்பத்துார் அடுத்த புதுமாவிலங்கை பகுதியில் கடம்பத்துார் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பஜாஜ் பல்சர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் வாகனத்தில் வந்த புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த ராஜிவ்காந்தி, 38, அவர் மனைவி ஜானகி, 32 மகன் கிருஷ்ணா ,16 ஆகியோரிடம் சோதனை செய்ததில் 200 கிராம் கஞ்சா இருந்தது. பறிமுதல் செய்த கடம்பத்துார் போலீசார் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி