உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மொபைல் போன் திருடிய 4 பேர் கைது

மொபைல் போன் திருடிய 4 பேர் கைது

மீஞ்சூர்: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சீல்ராஜ், 25. லாரி டிரைவர். நேற்று முன்தினம்இவரது தம்பி சிரஞ்சிவி, 22, உடன், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு அதே பகுதியில் படுத்து உறங்கினார்.நள்ளிரவில் மர்ம நபர்கள், லாரியில் வைத்திருந்த மொபைல்போனை திருடிக்கொண்டு, பைக்கில் தப்பியோடுவதை கண்டனர். மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் அங்கு சென்று, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருந்த பதிவுகளை கொண்டு, மொபைல்போன் திருட்டில் ஈடுபட்ட சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தினேஷ்குமார், 20, அருண்குமார், 20, ராஜேஷ், 18, மீஞ்சூர் பட்டமந்திரி பகுதியை சேர்ந்த அப்பன்ராஜ், 30, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை