உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பேருந்தில் படியில் தொங்கி பயணம் கல்லுாரி மாணவன் கால் எலும்பு முறிவு

அரசு பேருந்தில் படியில் தொங்கி பயணம் கல்லுாரி மாணவன் கால் எலும்பு முறிவு

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கே.பி.எம்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் விஜயகுமார், 23. இவர், திருத்தணி அரசு கல்லுாரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை அரசு பேருந்தில் கல்லுாரிக்கு வந்தார். பின் நேற்று மாலை, 4:00 மணிக்கு தன் கிராமத்திற்கு செல்வதற்காக அரசு பேருந்து தடம் எண்: டி.48 பேருந்தில் ஏறிய விஜயகுமார், பின் படிக்கட்டில் நின்று தொங்கியவாறு பயணம் செய்தார். அப்போது கமலா தியேட்டர் அருகே சென்ற போது தவறி கீழே விழுந்தார். இதில் விஜயகுமாரின் இடதுகால் முறிவு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை