| ADDED : ஆக 19, 2024 11:14 PM
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட தொடுகாடு ஊராட்சி . இங்குள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது.குளத்தின் கரை பகுதியில் தனிநபர் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். இந்த குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், குளத்தில் தேங்கி நிற்கிறது. மேலும், குப்பையும் கொட்டப்பட்டு கழிவுநீரில் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சி குளத்தில், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் குளத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனபகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.