உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளியில் மாணவனை கடித்த பாம்பு

பள்ளியில் மாணவனை கடித்த பாம்பு

திருத்தணி:திருத்தணி அடுத்த மேல்முருக்கம்பட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சபரி, 9. அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை பள்ளிக்கு சென்ற சபரி, இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றான்.அங்கு பதுங்கியிருந்த பாம்பு ஒன்று மாணவனை கடித்தது. ஆசிரியர்கள் மாணவனை திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவல் அறிந்ததும் கல்வித்துறை அதிகாரிகள் வந்து மாணவனிடம் நலம் விசாரித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை